Header Ads



பலவந்தமாக அலரி மாளிகையில், தங்கியிருப்பவர்களிடம் இழப்பீடு அறவிடப்படும்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் பலவந்தமாக அலரி மாளிகையில் தங்கியிருப்பது சம்பந்தமாக எதிர்காலத்தில் அவர்களிடம் ,og;gPL அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இதற்காக வேலைத்திட்டம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தானே நாட்டின் உத்தியோகபூர்வ பிரதமர் எனக் கூறி, அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருப்பதுடன் கட்சியினரும் அங்கு தங்கியிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச சட்டவிரோதமான பிரதமர் எனவும் அவரது அமைச்சரவையும் சட்டவிரோதமானது எனவும் ஐக்கிய தேசிய முன்னணியினர் கூறி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.