Header Ads



உம்ரா சென்றுவந்த ஹக்கீமையும், றிசாத்தையும் திட்டலாமா...??

-Hasmiya Uthumalebbe-

ஹலோ மிஸ்ட்டர் ரஸ்மின் அவர்களே!

உங்களது வீடியோ ஒன்று பார்க்கக் கிடைத்தது. ஹக்கீமும் ரிஷாதும் மக்காவில் ஒன்று சேர்துள்ளார்கள் என்றும் அவர்கள் சமூகத்துக்காக சேரவில்லை என்றும் திட்டித் தீர்த்துள்ளீர்கள்.

ரிஸாட்டும் ஹக்கீமும் அரசியல் செய்கின்றவர்கள். முஸ்லிம்களுக்கு வன் கொடுமைகள் செய்கின்ற ஒரு ஆட்சியாளன் நாட்டை ஆழக்கூடாத என்ற நல்ல நோக்கத்திலும், தனது கட்சியின் உறுப்பினர்களை மஹிந்த தரப்பு விலைக்கு சோரம் போகமால் தடுக்கும் நல்ல நோக்கத்திலேயே இரு கட்சி உறுப்பினர்களும் புனித உம்ராவுக்கு சென்றார்கள். மாறாக நீங்கள் கூறியது போன்று உமர் ஹத்தாப் போன்றவர்கள் இலங்கைகயை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல.

அவர்கள் இப்போதாவது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மார்க்கத்தின் பேரில் இயக்கவாதிகளாக இருக்கும் நீங்கள் சமூகத்துக்காக ஒன்று சேர்ந்த சரித்திரம் உன்டா? அழுத்கமை, பேருவளை, திகனை போன்ற கலவரங்களின்போது நீங்கள் மற்றைய இயக்கங்களுடன் கூட்டு சேர்ந்து செயற்பட்டிருக்கின்றீர்களா? இல்லவே இல்லை.

நீங்கள் ஒரு முஸ்லிம், ஏகத்துவத்தையும் இஸ்லாத்தையும் முஸ்லிம்கள் மத்தியில் எடுத்துரைப்பவர். அப்படியிருக்கும்போது புனிதா மக்காவுக்கு சென்ற முஸ்லிம் தலைவர்களை பொது மேடையில் திட்டித் தீர்த்துள்ளீர்கள். அவரது குறைகளை பொது மேடையில் கழுவி ஊத்தியுள்ளீர்கள். புனித உம்ராவுக்கு சென்றதன் நோக்கம் அவர்களுக்கும் அவர்களை படைத்த ரப்புக்கும் மாத்திரமே தெரியும். நீங்கள் அவர்களை திட்டியமைக்கு மன்னிப்புக் கோர வேண்டும்.

அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்திருக்கக்கூடும். மார்க்கத்தை கற்பிக்கும் உங்களது வீடியோவைப் பார்த்துவிட்டு அந்த தலைவர்களுக்கும் பொது மக்கள் ஏசும் போதெல்லாம் கிடைக்கும் பாவங்கள் யாருக்கு போய் சேரும்? அது ரஸ்மின் ஆகிய உங்களுக்கே அந்தப் பாவங்களின் தண்டனைகள் கிடைக்கும்.

குறை கூறி புறம் வனவ ஒவ்வொருவனுக்கும் கேடு தான். என்று புனித அல்குர்ஆன் 104: 1-9 எனும் வசனத்தில் குறிப்பிடுகின்றது.

அடுத்தவர்களின் மாமிசத்தை உண்ணாமல் பாமர மக்களிடத்தில் மார்க்கத்தையும் ஏகத்துவத்தையும் எத்தி வைக்கும் வேளையை பாருங்கள்.

ஆயிரம் இயக்கங்களாக SLT என்றும் TJ என்றும் ACTJ என்றும் CTJ என்றும் இன்னும் எத்தனையோ TJ என்றும் ஒவ்வொரு மாதமும் பிரிந்து பிரிந்துதான் செல்கின்றீகளே தவிர சேர்ந்தது கிடையாது. மார்க்கத்தில் ஒற்றுமையில்லாத நீங்கள் புனித குர்ஆனில் சுன்னா விளக்கங்களில் பிழை கானும் நீங்கள் அரசியல் வாதிகளை ஒற்றுமைப்படுத்த முயற்சிப்பது புதுமையிலும் புதுமை?

ரஸ்மினின் பல உரைகளை கேட்டிருக்கின்றேன், அவரது உரைகளில் 90 வீதமானவை மற்ற இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் வசைபாடுவதே அவரது முழு நேர தொழில். அவர் மார்க்க ரீதியில் பக்குவமற்றவர் என்றே கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் இலங்கையில் இனவாதத்தை தூண்டியவர்களும் நீங்கள் தான். நீங்கள் முஸ்லிம் தலைவர்களை மட்டுமல்ல பௌத்த தலைவர்களையும் பௌத்த மதத்தையும் மிகவும் இழிவாக பேசி சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டு பன்னியவர்கள் இந்த காரர்கள்தான்.

இவ்வாறு நிலமை இருக்கையில், நீங்கள் பின்பற்றி வந்த பீ.ஜே. என்பரும் இப்படித்தான் பொது மேடைகளில் இஸ்லாமிய தலைவர்களை குறை கண்டும் புனித அல்குர்ஆனில் குறை கண்டும் ஏசிப்பேசி இருந்தார். தற்போது பீ.ஜே.யின் நிலமை என்ன? சிந்தியுங்கள். அவரது லீலைகள் பற்றி நான் இங்கு பேச வரவில்லை.

இனியாவது பொது மேடைகளில் ரஸ்மின் பக்குவம் பேனுவார் எனவும், மற்ற மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட மாட்டார் என நம்புகின்றேன்.

7 comments:

  1. சொல்ல வேண்டியத முறையாக சொன்னீங்க நன்றி சார் ஆனால் மண்டையில ஏறும் கூட்டமல்ல அது

    ReplyDelete
  2. Anda arumai mattukku edu allam puriyadu sister

    ReplyDelete
  3. Rasmin sonnadu mihach sari hakeem risad eruvarum suyanalavaadihal

    ReplyDelete
  4. அவங்களுக்கு பீஜேட மாமிசத்ததான் யாரும் திங்ககூடாது அவங்க யாருடைய மாமிசத்தையும் திங்கலாம்.

    ReplyDelete
  5. க‌ட்டுரையாள‌ரும் ர‌ஸ்மினின் மாமிச‌த்தை புசிக்கிறார். அவ‌ரின் குறை பேசுகிறார். இதுவும் த‌ப்ப‌ல்லோ.

    ReplyDelete
  6. Thanks to Hasmiya Uthumalebbe, your thoughts are absolutely right. This TJ & Co.... is working for 20% commission and when they don't receive that they find issues with Islam and separate from group. Their nature is blasting everyone. Politicians are far better than these groups. I think no body bothers about these daily dividing group. Allah knows everything.

    ReplyDelete

Powered by Blogger.