Header Ads



பாராளுமன்ற இன்றைய அமர்வு குறித்து, மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் அமைதியாக செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதைனை பதிவிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கட்சித்தலைவர்களுடனான நேற்றைய சந்திப்பின் போது கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைதியாக இருந்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற 3 நாடாளுமன்ற அமர்வுகளும் பெரும் போராட்டத்திலேயே முடிவடைந்திருந்தன. இதையடுத்து இன்றைய தினம் சில நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வு சற்று அமையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Hehehe, he is the culprit who drags the parliament sittings in order to help Mahinda to buy time so that SC ruling will be out then. They are desperately looking forward to an election.

    ReplyDelete
  2. yes , is he a president or a .
    Something wrong with him.
    MR to shameless guy .

    ReplyDelete

Powered by Blogger.