Header Ads



பிரதமர் என தம்மை கூறிதிரியும் மஹிந்த, குரல்மூல வாக்கெடுப்புக்கு அழைத்தபோது நிராகரித்து விட்டார்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒரு அரசாங்கம் பதவியில் இருக்க முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வுகள் திடீரென எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெரும்பான்மை இல்லாத ஒருவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியில் இருக்க முடியாது. இது ஜனநாயக மரபுகளுக்குரிய செயலாகும்.

இதை உணர்ந்து, பிரதமர் என தம்மை கூறிக்கொண்டு திரியும் மஹிந்த தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

அத்துடன், ஒன்று அல்ல இரண்டு அல்ல கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் குரல் வாக்கெடுப்பின் மூலம் அது நடத்தப்படவில்லை என ஜனாதிபதி குறை கூறி வந்தார்.

இதையடுத்து இன்று குரல்மூல வாக்கெடுப்புக்கு நாம் அழைத்த போதும் அதையும் நிராகரித்து விட்டார்.

இதற்கு காரணம் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததே. ஆகவே பெரும்பான்மை இல்லாமல் பதவியிலிருக்கும் மஹிந்த பதவி விலக வேண்டும்.

அத்தோடு பெரு்மபான்மை இல்லாத அரசாங்கம் என்பதால் அரச நிதியை மஹிந்த உபயோகப்படுத்தி வருகின்றார்.

இது தவறு. ஆகவே இத தொடர்பான பிரேரணை ஒன்றையும் தற்போது முன்வைத்துள்ளோம்.

இது தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி விவாதம் நடைபெறும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.