Header Ads



நாட்டில் கொள்ளையிடும், நிலைமை உருவாகும் - குமார வெல்கம

நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிந்து விட்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருந்த கடனை இடைநிறுத்தியுள்ளது. இதனால், நாட்டில் நெருக்கடி தீரும் வரை 1.85 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைக்காது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளும் போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரிய நிலையிலேயே இருக்கின்றது.

அனைவரும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்காது போனால், நாட்டில் கொள்ளையிடும் நிலைமை உருவாகும்.

அதேவேளை நான் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவில்லை. நான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காரன். இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய சில காலம் செல்லும்.

மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தது நல்லது. உரிய நேரத்தில் நான் பொதுஜன பெரமுனவில் இணைவேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெல்கம,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை எனவும், இளைஞர்கள் போட்டியிட முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.