Header Ads



எலிக் காய்ச்சலினால் 19 பேர் மரணம் - உடனடியாக வைத்தியரை நாட அறிவுரை

எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். பரீட் தெரிவித்துள்ளார்.

இக்காய்ச்சலானது, பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . மேலும், இலேசான காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்தால் கண்டிப்பாக வைத்தியரை நாடி, உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.