Header Ads



எம்பிலிபிட்டியவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு, முற்றாகத் தடை - சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா

எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், மாட்டிறைச்சி விற்பனைக்கு, முற்றாகத் தடைவிதிக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், நேற்று(24) மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மாகாண ஆளுநரிடம் சில கருத்துகளை முன்வைத்து உரையாற்றிய எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகராதிபதி கலாநிதி ஓமல்பே சோபித தேரர்,

கடந்த ஏழு வருடங்களாக, எம்பிலிபிட்டிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மாடு வெட்டுவதற்கும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் எம்பிலிபிட்டிய நகர சபை,  தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ளது என்றும் இதனால் சமூகங்களுக்கிடையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.

பசு மாடுகளை பாதுகாக்கும் திட்டத்தை, ஸ்ரீ போதிராஜாராம அமைப்பின் மூலம் கோவுல்ஆர பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அவர்,  தற்போது அந்த இடத்தில் 150 பசுக்கள் உள்ளன என்றும் நீதிமன்றத்தின் ஊடாகவும் மற்றும் இலவசமாக அன்பளிப்புச் செய்யும் பசுக்களை இவ்வாறு பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் 400க்கும் அதிகமான பசுக்களை, ஏழை குடும்பங்களுக்கு  இலவசமாக வழங்கியுள்ளோம். அத்தோடு, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலைகளைத் திறக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம்.

“எம்பிலிபிட்டிய நகர சபையின் மூலம், கடந்த 7 வருடங்கள் தடை செய்யப்பட்டிருந்த மாட்டிறைச்சி விற்பனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை எம்பிலிப்பிட்டிய நகரசபை வழங்கியுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை  உடனடியாக  நீக்கி, எம்பிலிட்டிய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை வேண்டும்” எனவும் அவர் இதன்போது, கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க,

காலநிதி ஓமல்பே சோபித தேரர் கேட்டு கொண்டதற்கமைய, எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், மாட்டிறைச்சி விற்பனையை, முழுமையாகத் தடை செய்வதற்கு தாம் ஆதரவை வழங்குவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய எம்பிலிபிட்டிய நகர சபை பிரதேசங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கோ, மாடுகளை வெட்டுவதற்கோ தான் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.

10 comments:

  1. Thanks for your necessary action

    ReplyDelete
  2. Allow the cattle to grow in number, they will realise the problem when the cattle invade their roads, gardens, fields looking for food, not now but wait and see.

    ReplyDelete
  3. Muslims will benefit a lot by the ban on beef.

    ReplyDelete
  4. நல்ல விடயம், அதேநேரம் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபான சாலை க ளுக்கு தான் எதிர்புத் தெரிவித்துள்ளார் தேரர். பழய மதுபான சாலைகளுக்கு புத்த பெருமானின் ஆசிர்வாதம் உண்டோ.

    ReplyDelete
  5. Beef is a very taste meat.

    Cow meat is good for human consumption.

    When cows do not provide milk in a certain age, they should be slaughtered for human consumption.

    ReplyDelete
  6. இனி வெள்ளெக்காரன் அந்த பக்கத்துக்கு செல்லமாட்டான்.வெள்ளெக்காரனுக்கு மரக்கறி எல்லாம் சரிவராது.

    ReplyDelete
  7. இந்துக்கள் தமிழர்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு வந்து மாட்டிறைச்சியை யாருக்கும் தெரியாது போல packet பண்ணி ஒழித்துவாங்கிப் போவார்கள்.இவர்கள் வாங்காமல் விட்டாலே போதும் மாட்டிறைச்சியின் தேவை குறைந்துவிடும்

    ReplyDelete
  8. நீங்கள் சாராயம் குடிக்க முஸ்லிம் கடைகளுக்கு வந்து bites என்ற பெயரில் இறைச்சி போரியல் வாங்கி போறீங்க நாங்க மாடு அறுக்குறோம் என்று எங்கள குற்றம் பிடிக்கிறீங்க. நீங்கள் திங்காமல் விட்டாலே போதும்.தமிழர்கள் இந்துக்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு வந்து மாட்டிறைச்சியை யாருக்கும் தெரியாத மாதிரி packet பண்ணி வாங்கி போவார்கள் இவர்கள் இப்படி வாங்காமல் விட்டாலே மாட்டிறைச்சியின் தேவை குறைந்து விடும்.தமிழ் பகுதிகளில் உள்ள முஸ்லிம் ஹோட்டல்களில் மாட்டிறைச்சி கறியை யார் உண்கிறார்கள்,அவ்வளவு கறியும் அப்படியே முடிகிறதே எப்படி முஸ்லிம்களா வந்து தமிழ் பகுதி கடைகளில் வாங்குகிறார்கள்

    ReplyDelete
  9. சில ஊர்களில் மாட்டிறைச்சி இல்லாவிட்டால் முஸ்லிம்கள் ஒன்றும் பட்டினி இருந்துவிடப் போவதில்லை. இதன் பாதிப்பு முஸ்லிம்களை விட மற்றவர்களுக்கே அதிகம். இந்த மொக்கு மண்டைகளை விட்டுப் புடிப்பதே சிறந்தது.

    ReplyDelete
  10. Good decision. Keep it up. Not only empilipitiya also whole island. For how long possible? ஒரு ஆறு மாதம் தடை செய்தாலே போதும். முழு நாடும் மாடுகளால் நிரம்பி வழியும்

    ReplyDelete

Powered by Blogger.