Header Ads



50 க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் ஜின்தோட்டயில் தாக்கப்பட்டுள்ளன

இலங்கையில் காலி மாவட்டத்தில் கின்தொட்ட பகுதியில் இனங்களுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நிலைமை வழமைக்கு திரும்பிய நிலையில் சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு மாலையில் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் இதனையடுத்து தங்களுக்கு எதிரான வன்முறைகள் இரவு ஆரம்பமானதாகவும் உள்ளுர் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

கிங்தொட்ட பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு வருகை தந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கூறுகின்றார்.
அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றிற்கு அருகாமையிலே தங்களுக்கு எதிரான வன்முறையாளர்கள் குழுமி நிற்பதாகவும் பௌத்த மதகுருவொருவரின் பின் புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

4 comments:

  1. So you are happy with Yahapalanaya.

    ReplyDelete
  2. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற நிலைமைகள் இன்னும் ஏற்பட வைப்பதற்கு ஒரு கூட்டம் தயாராகுவார்கள்.

    ReplyDelete
  3. Beware! You will be arrest! If you continue comment like thid

    ReplyDelete
  4. Beware! You will be arrest! If you continue comment like thid

    ReplyDelete

Powered by Blogger.