வில்பத்து விவகாரத்திற்கு அரசியல் மட்டத் தீர்வு - சூறா கவுன்சில், முஸ்லிம் எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு
(அஷ்ரப். ஏ. சமத்)
தேசிய சூறா ஹவுன்சிலின் ஏற்பாட்டில் நேற்று (5) இரவு மருதானை அல் - ஷபாப் மண்டபத்தில் அன்மைய வில்பத்து வனவளப் முசலிப் பிரதேசத்தில் முஸ்லீம் தமிழ் மக்களது வயல் காணி நிலங்களும் வர்த்தமானி அறிவித்தலினால் அப்பிரதேச வாழ் மக்கள் பாரிய பிரச்சினையை எதிா்நோக்குகின்றனா். இப்பிரச்சினையை எவ்வாறு அரசியல் மட்டத்தில் கையாழ்வது பற்றி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் கொண்ட கலந்துரையாடல் தேசிய சூறா சபையின் தலைவா் தாரிக் மஹூமுத் தலைமையில் நடைபெற்றது.
இப்பிரச்சினை சம்பந்தாக காலாநிதி ஹஸ்புல்லாஹ் வில்பத்து முசலி பிரசேத வாழ் மக்களது சரித்திரம் அடங்கிய சரியான தகவல்கள் விளக்கிக் கூறினாா்.
வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றப் பிர்ச்சினைகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இவ்விடயம் பற்றி அரசியல் மட்டத்தினாலேயே தீா்வு காணப்படல் வேண்டும். சமுகம் சாா்பாக சகல பா.உறுப்பிணா்களும் கட்சி வேறுபாடு பாராது இவ் விடயத்தில் ஒருமித்த குரலில் நாம் செயற்படல் வேண்டும். ஜனாதிபதி, பிரதமா் மற்றும் சிவில் சமுகப் பிரநிதிகள் ,கட்சித் தலைவா்கள், சந்தித்து இவ் விடயம் பற்றி கலந்துரையாடி தெளிவுபடுத்தப்படல் வேண்டும். அமைச்சரவையில் உள்ள 5 முஸ்லீம ்கபிணட் அமைச்சா்கள் இவ் விடயத்தில் ஒருமித்து அரசியல் ரீதியாக தீா்வைப் பெற முயற்சித்தல் வேண்டும், 22 பாராளுமன்ற உறுப்பிணா்களும் இவ் விடயம் பற்றி கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு முறையிடல் வேண்டும். சந்தித்து இவ் விடயம் பற்றி தமது ஒருமித்த ஒத்துழைப்பை வழங்க சூறா கவுண்சில்் முடிபு எடுக்கப்பட்டது.


So, there is no any pics taken except these with Rishad & Co...??
ReplyDeleteAlso pls advise MP Rishad not to explore the subject alone.....