Header Ads



ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவுரை இதுதான்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கப்பட்ட காலம் முதல் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஷரீஆவின் வரையறைக்குள் நின்று நளினத்தன்மையையும் நடுநிலைமையான போக்கையும் கடைபிடித்து மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்துள்ளது. 

கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் இதற்கு அடிப்படையாக காணப்படுகின்றது: அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:18)

மேலும், பின்வரும் ஹதீஸும் இதற்கு அடிப்படையாக அமைகின்றது:  'இலகுவாக்குங்கள்;, சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்;. வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி)

துரதிஷ்டவசமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் 'முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தற்போதைய நிலையில் பூர்த்தியானதாகவே உள்ளது' என்று கூறிய விடயம் தவறான முறையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

எமது முன்னோர்கள் இந்த சட்டத்தை இயற்றும் போது பல சிரமங்களை மேற்கொண்டு ஓரளவு பூர்த்தியான நிலைக்கு அதனைக் கொண்டுவந்துள்ளனர், அது அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும் என்பதே உண்மையில் அவர் கூற முற்பட்ட விடயமாகும். இது இன்றைய நிலையில் இச்சட்டத்திற்கு மாற்றங்கள் அவசியமில்லை என்பதை குறிக்காது. குறிப்பாக இது காழி நீதிமன்ற நிர்வாக முறையில் மாற்றங்கள் தேவையில்லை என்பதை குறிக்காது.

பெண்களுடைய விவகாரத்தில் காணப்படும் குறைபாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்கத்தயாராக இல்லை எனும் குற்றச்சாட்டு ஜம்இய்யாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். பெண்களை மதிக்காதிருத்தல், அவர்களை அகௌரவப்படுத்தல், அவர்களை ஒதுக்குதல் போன்றவை இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான செயற்பாடுகளாகும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கூறுகின்றது. ஆகவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த மார்க்கப் போதனைகளுக்கு எப்போதும் கட்டுப்பட்டே செயற்பட்டு வருகின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

பெண்களின் உரிமைகளும் ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் இப்பணியை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி                                                                                           தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

5 comments:

  1. جزاكم الله خيرا இதில் சில பெண்கள் சிலரின் கைக்கூலிகளாகவும்,மேற்க்கத்திய கலாச்சாரத்துக்கு அடி பணிந்து தான் விரும்பிய விதத்தில் இஸ்லாத்தை வளைத்து வால நினைக்கும் பெண்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் உலமா சபைக்கு தேவை இல்லை.
    மேலே 03 வதாக குறிப்பிட்டு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களின் அங்கிகாரத்தையு எட்புடமையையும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளப்படும் உறுதிப்படுத்தல் என்பது,ஷரியாவின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துப்போகாமல் வரும் சந்தர்ப்பம் ஏற்ப்படலாம்.ஆகவே அழ குரானுக்கும் அச்சுன்னவுக்கும் உட்பட்டு வரக்கூடிய வகையில் சட்டங்களை திருத்துவதுதான் சிறந்த வழியாக அமையும்.இஸ்லாத்தைப்போருத்த வரையில் பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க முடியாது.உண்மை எதுவோ அது தனி நபராக இருந்தாலும் நிலை நாட்டப்பட வேண்டும்.பெரும்பான்மை போர்க்கொடி தூக்குவதர்க்கல்லாம் வளைந்து கொடுக்க முடியாது.

    ReplyDelete
  2. பெண்களின் உண்மையான பிரச்சினைகள், சட்டத்தில் உள்ள குறைபாடுகள், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், பாரபட்சங்கள் குறித்து நியாயமாக சிந்தித்து, காலத்திற்கு பொருத்தமான மாற்றங்களை செய்யாமல், பிடிவாதமாக இருப்பது எந்த வகையிலும் நல்லது அல்ல.

    முன்னர் போன்று இல்லை, இன்று பெண்களும் கல்வி கற்கின்றார்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றார்கள், ஒவ்வொரு சமூகத்திலும், நாட்டிலும் பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளை அறிந்து கொள்கின்றார்கள், சுயமாக நிறைய சிந்திக்கின்றார்கள், இந்த நிலையில் யதார்த்தத்தையும், உலக மாற்றங்களையும் புரிந்துகொள்ளாமல், "யூத கைக்கூலிகள், மேற்கின் அடிமைகள்" என்று குற்றம் சுமத்தி பெண்களையும், அவர்களின் குரல்களையும் அடக்க நினைத்தால், அது மேலும் மேலும் பல "முன்னாள் முஸ்லிம்கள்" உருவாகத்தான் வழிவகுக்கும். மூடி வைத்து அதிகாரம் பண்ணிய காலம் மலையேறிப் போயாச்சு. சிந்தித்து செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  3. These fellow acts like a CHAMELEONS in the bush which changes colours to suit the environment for self protection. Religious matters cannot be tampered by "MAN", it is DIVINE. These guy has STILL NOT ANSWERED THE QUESTION REGARDING THE ISSUE/ACCEPTANCE OF A BLOCK OF STATE LAND WHICH MAHINDA RAJAPAKSA GAVE HIM/ACJU IN COLOMBO 12 VALUED AT MILLIONS OF RUPEES DURING THE MAHINDA REGIME (http://www.asiantribune.com/node/6395 raised by "The Muslim Voice" in many web forums and Social Media. Rizvi Mufthi has also FAILED to answer questions about the large amounts of funds he and the ACJU had received from various sources to support Mahinda Rajapaksa at the UNHRC in 2012. Rizvi Mufthi's life style is contradictory to the principles of Islam and misleads the humble Muslim community in Sri Lanka for his political benefits.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. எனது இங்கு சமர்பித்திருக்கும் கேள்விக்கு மழுப்பல் இல்லாத பதில் கிடைக்குமா?
    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பிற்கினிய இஸ்லாமிய! சொந்தங்களே ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக.
    இப்பதிவு உங்களையும்,என்னையும் பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்
    இப்பதிவு யாரையும் குறை கூற அல்ல இருப்பினும் சிலருக்கு பாதிப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் ஆகையினால் அவர்கள் தமது தவறை திருத்திக்கொண்டு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்த வழியில் மக்களை வழிநடத்த அல்லாஹ் அவர்களுக்கு நல்வழியை காட்டுவானாக

    இன்று எமது மஸ்ஜிதுகளில் இஸ்லாத்துக்கு மாற்றமாக நடக்கும் செயல்களை (பித்அத்துகளை) இலங்கையில் இருக்கும் அணைத்து அறிவுள்ள உலமாக்களும் அறிவார்கள் இதிலே மிக முக்கியமாக பஜிர் தொழுகைக்குள் நடக்கும் குனூத்., இந்த குனூத் ஷாபி இமாமை பின்பற்றும் அறியாமை வாதிகளால் தினமும் சுபஹ் தொழுகையில் ஓதப்படுகிறது.,(அல்லாஹ் தனது கலாமில் இப்படி கூறுகிறான் " يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏ Quran 4.59) இவர்களிடம் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்த வழிகளை கூறி விவாதிப்பதை விட இப்படி ஒரு கேள்வியை கேட்டுப்பார்ப்போமே! ஏனைய மூன்று மத்ஹபுகளிலும் இந்த குனூத் இல்லையே! அவர்கள் வழிகேடர்களா? மற்றைய இமாம்கள் கூறிய வழி பிழையானதா? அந்த இமாம்களை புறக்கணிக்கும் இன்றைய இந்த ஷாபி உலமாக்களின் வழி பிழையானதா? சிந்திக்க மாட்டீாகளா?., மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நான்கு இமாம்கள் நல்லவர்கள், அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டதெல்லாம் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்த வழிகளை பின்பற்றும்படி
    மனிதன் என்ற வகையில் சில குறைகள் இந்த இமாம்களிடத்திலும் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் நான் மேற்கூறிய குர்ஆன் வசனத்தின் படி அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் காட்டித்தந்தவைகள் எம்மிடம் இருக்கிறது ஏன் இன்றைய உலமாக்கள் அவைகளில் கவனம் செலுத்துவதில்லை,ஏன் இன்றைய இந்த உலமாக்கள் அறிவாளிகளாக இல்லையா? அல்லது சிந்திக்கும் திறன் அற்றவர்களா?
    ஏன் இவர்களிடம் தயக்கம்? யாருக்காக இவர்கள் அச்சப்படுகிறார்கள்? அல்லாஹ்விடம் இவர்களுக்கு அச்சம் இல்லையா? அதுவும் சரி இதுவும் சரி என்ற நிலை இஸ்லாத்தில் இல்லை, அதுவும் சரி இதுவும் சரி என்ற நிலை நஸராக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு நிலை, இஸ்லாத்தில் ஒரு விடயம் கூறப்பட்டிருக்கும் என்றால் அது உறுதியானதாகும் இஸ்லாத்தில் உயாந்தவன்,தாழ்ந்தவன், வளைவு,நொளிவுகள் கிடையாது, இதற்கு பல சம்பவங்கள் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் காணலாம் உதாரணத்துக்கு ஒரு சம்பவம் இந்த சம்பவம் பல படிப்பினைகளை தருவதால் அதனை இங்கு சமர்ப்பிக்கிறேன் " ஒரு நாள் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும்,மக்கத்து காஃபிர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்த சந்திப்பு (கலந்துரையாடல்) இஸ்லாத்துக்கு மிக முக்கியம் என்று ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் நினைத்தார்கள் இந்த நேரத்தில் அந்த இடத்துக்கு உம்மி மக்தூம் ரலியல்லாஹு... அவர்கள் சமூகம் தந்து ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறுகிறார்கள் அந்த கண்பார்வையற்ற சஹாபிக்கு ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பதில் தராத நிலையை அல்லாஹ் கண்டிக்கிறான்,
    உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை புறக்கணித்தமைக்காக அல்லாஹ் ஒரு ஆயத்தை 80:1 عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏ இறக்கி ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான் எப்படி கண்டிக்கிறான் "அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.,அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது," ஒரு மூன்றாவது மனுஷனுக்கு கூறுவது போன்று அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நோக்கி பேசுகிறான் இந்த சம்பவம் பல படிப்பினைகளை எமக்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான் * புறக்கணிப்பு * வளைந்து கொடுத்தல் * எச்சரிக்கை * ஏற்றத்தாழ்வு * குர்ஆனின் தூய்மை * அல்லாஹ்வின் சாபம் *., ஆகவே உலமாக்கல்லே, சிந்திக்கவும், ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாரிசாக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்வதும், ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த முதலில் நரகம் போகும் கூட்டத்தாரில் உங்களை ஆக்கிக்கிக்கொள்வதும் உங்களை சார்ந்ததாகும் எனக்கும் இதை நன்நோக்கத்தில் பார்க்கும் அணைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக

    ReplyDelete
  5. Absolutely correct. Why these people hesitate to tell the truth? No fear Allah?

    ReplyDelete

Powered by Blogger.