அரசை கவிழ்ப்பதற்கான மக்கள் பலமோ, மனோ பலமோ மஹிந்தவிடம் இல்லை
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை மாற்றுவோம் என மஹிந்த கூறுவது வேடிக்கையான விடயம். அரசை கவிழ்ப்பதற்கான மக்கள் பலமோ, மனோ பலமோ மஹிந்த ராஜபக்ஷவிடம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் இம்புட்டான பகுதியில் 352ஆவது சதொச கிளையினை திறந்து வைத்தப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
மே மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவோம் என மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து நகைப்புக்குரியது.
மது பானத்திற்காகவும், சோற்றுப் பொதிக்காகவும் மஹிந்தவின் பின்னால் ஒரு கூட்டம் சென்று கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டமே அவர் பின்னால் இருக்கின்றது. ஆனால் எப்போதும் அவர்கள் நிலையானவர்கள் அல்ல.

Post a Comment