ஆட்சி செய்ய முடியவில்லை என்றால், ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்திடம் தெளிவான கொள்கையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் வேறு ஒரு தரப்பிடும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து, நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஒற்றையாட்சி என்ற பெயரை வைத்து நாட்டில் சமஷ்டியை முறையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment