Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சதி­யல்ல, அநீதி நடந்­துள்­ளது - ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல்

வில்­பத்து வனப்­ப­கு­தி­யுடன் இணைந்த நான்கு வனப் பகு­தி­களைப் பாது­காக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக பெய­ரிடும் வர்த்­த­மானி அறி­வித்தல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட சதி­யல்ல. ஆனால் இதில் அநீதி நடந்­துள்­ளது என ஏற்­றுக்­கொள்­கிறேன்.

இவ்­வி­வ­கா­ரத்தில் எவ­ருக்கும் பாதிப்­பில்­லாது தீர்­வொன்று விரைவில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி. அபேகோன் தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­தியின் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வனப்­பி­ர­தே­சங்கள் வன­ஜீ­வ­ரா­சிகள் வல­ய­மா­கவும் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் அத்­திட்டம் தற்­போது கைவி­டப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள வனப் பிர­க­டன வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் இல்­லாத தீர்­வொன்று விரைவில் எட்­டப்­படும்.

முஸ்­லிம்­க­ளுக்கு விரோ­த­மா­கவோ அல்­லது வேறெந்த நோக்­கத்­துக்­கா­கவோ இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அப்­பி­ர­தேச எல்­லை­களில் வாழும் முஸ்­லிம்­களை பாது­காப்­ப­தற்­கா­கவே இப்­பி­ர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டது. சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை ஏற்­றுக்­கொள்­கிறேன். அத்­த­வ­றுகள் திருத்­திக்­கொள்­ளப்­படும் என்றார்.

1 comment:

  1. நம்பிட்டோடோம்ம்!!???!! துரோகத்தில்,பல உண்டு அதில் இதுவும் ஒன்று கிடைக்கும் ஆனால் கிடையாது .,,. வெட்கம் இல்லாமல் திரும்பவும் பிச்சைக்காரன் வருவானுகள் துனையாக நமது (மு) நக்கும் நாய்கள் கூட..,

    ReplyDelete

Powered by Blogger.