Header Ads



விமலின் உடல்நிலை மோசம், தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்


உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் நிலை மோசமடைந்துள்ளமையால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைத்து 70இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையில், தனக்கு பிணை வழங்காமைக்கு எதிர்பு தெரிவித்து விமல் வீரவங்ச கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. VERY CHEAP HEROS OF Srilankan politics !
    1. Shame on those who encourage this POLITICAL DRAMA .
    2. He must be charged for SUICIDE ATTEMPT.
    3. An act of causing disrespect to court decisions .
    4. An act of politicising court procedures .
    5. A cheap tactics to become the HERO of the JO.
    6. Spineless and AGRESSIVE political culture that
    should be rejected by the voters because such
    men are a disgrace to be leaders.
    7. This kind of cheap PUBLICITY HUNTING POLITICS
    has to be defeated at any cost .
    8. Respectable citizens of the country should
    learn a lesson from this experience that
    undeserving men should not be elected to
    COUNTRY'S LEGISLATURE to make it a place of
    JOKE.

    ReplyDelete

Powered by Blogger.