3600 கோடி டொலர் வெளிநாட்டு கடன் உள்ளது - பிரதமர் ரணில்
இலங்கைக்கு 3600 கோடி டொலர் வெளிநாட்டு கடன் சுமை உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் சுமையை பார்க்கும் சாதாரண நபருக்கு தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணமே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடக்கவெல குலரத்ன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வருடத்தில் இருந்து 2026ஆம் ஆண்டு வரை அந்த கடனை செலுத்த நேரிடும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியாவது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி கடனை செலுத்தும் சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Hope this is only good thing came out of MR and co regime in SL. This is a good gesture of wiping out of LTTE
ReplyDeleteWhy still our PM not commit suicide yet ?
ReplyDeleteCan this PM know that how are many ciphers there?
ReplyDelete