வடக்கில் 2534 புதிய வீடுகள், யாழ் - நாவற்குழியில் முஸ்லிம்களுக்கும் வழங்கப்படும்
(அஸ்ரப். ஏ. சமத்)
'செமட்ட செவன' தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நோக்கமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களினது அரசாங்கத்தினதும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 1267 மி. ருபா நிதி முதலீட்டுடன் 2534 வீடுகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ்பாணம், வவுனியா, மன்னார் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மவாட்டங்கள் உள்வாங்கப்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் 'செமட்ட செவன' வடக்கு மாகாண வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்த சூழ் நிலை காரணமாக தாம் வாழ்ந்த வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் இடம்பெறவுள்ளன.
நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டுக்காகவும் 5 இலட்சம் ருபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன் குறிப்பிட்ட அந்த நிதியினை முதலீடு செய்து வீடுகொள்வோர்களது வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த அணைத்து வீடுகளினதும் நிர்மாணப்பணிகள் இடம்பெறவுள்ளதுடன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வடமாகாணத்தில் தனது மாவட்டக் காரியாலயத்தின் ஊழியர்குழுவின் ஒத்துழைப்புடன் இந்த வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.
நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டுக்காகவும் தேவையான கட்டிடப் பொருட்கள் மிகவும் சலுகை விலையில் உதவி நிதியினை அடிப்படையாகக் கொண்டு வீடு கொள்வோருக்கு வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான வீடு கொள்வோர்களை தெரிவு செய்வது சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலாளர்களினால் மேற் கொள்ளப்படுவதுடன் சகல வீடுகளும் வீடமைப்பு திட்டங்கள் என்ற வகையில் அபிவிருத்தி செய்யப்படும். இதன்படி இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் 2534 வீடுகளும் 44 மாதிரிக் கிராமங்களில் உள்ளடக்கபட்டு நிர்மாணிக்கப்படும்.
உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 1398 வீடுகள் கொண்ட 16 மாதிரிகிராமங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன் இதற்காக செலவு செய்யப்படவுள்ள தொகை 699 மில்லியன் ருபாவாகும்.
யாழ்ப்பாண மவாட்டத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டங்களின் எண்ணிக்கை 07 ஆகும். இங்கு நிர்மாணக்கப்படவுள்ள வீடுகளின் எண்னிக்கை 499 ஆகும். இதற்காக செலவாகும் தொகை 249 மி.ருபாவாகும்.
வடபகுதியில் அண்மைக்காலத்தில் நிர்மாணக்கப்படும் மிகப்பெரிய வீடமைப்புத் திட்டமான யாழ்ப்பாணம் நாவற்குழி கிராமம் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் சிங்களவர் தமிழர் முஸ்லீம்கள் என்ற மூவின மக்களும் உள்வாங்கப்படும் விதத்தில் இங்கு நிர்மாணிக்கபடும் வீடுகளின் எண்னிக்கை 250 ஆகும்.
உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 கிராமங்கள் இங்கு நிர்மாணிக்கப்படும் வீடுகளின் எண்னிக்கை 271 ஆகும். செலவிட எதிர்பார்க்கப்படும். தொகை 135 மில்லியன் ருபாவாகும்.
இந்த வேலைத்திட்டத்திற்கு ஏற்ப மன்னார் மாவட்டத்தில் 341 வீடுகள் கொண்ட 10 கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக செலவு செய்யப்படவுள்ள தொகை 170 மில்லியன் ருபாவாகும்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் கருத்து ஒன்றினை முன்னிருத்தி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் ஷில்பசவிய வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் தேர்ச்சி பெற்ற மேசன் தச்சுத் தொழிலாலர்கள் எண்ணிக்கையானவர்கள் சகல மவாட்டங்களையும் உள்வாங்கிய விதத்தில் இந்த புதிய வீடுகளின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த சகல கிராமங்களிலும் வீட்டு உரிமை பெற்ற பயனாளிகள் எற்கனவே தமது வீடுகளின் நிர்மாணப் பணிகளை ஆவலுடன் ஆரம்பித்திருக்கின்றனர். அரசாங்கத்தினால் வாழ்விக்கப்படும் நிதி உதவியுடன் தமது உடல் உழைப்பு மற்றும் சேமிப்புகளையும் ஒன்று திரட்டி இந்த 2500 மேற்பட்ட வீடமைப்பு நிர்மாணப்பணிகளை வடக்கு மக்களினால் மேற்கொள்ளப்படுவதுடன் எதிர்வரும் 06 மாத காலத்தினுள் இந்த வீடுகளின் சகல நிர்மாணப் பணிகளையும் பூர்த்தி செய்வதாகும். வடபகுதியின் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் வீடுகொள்வோர்களினது எதிர்பார்ப்பாகும்.

Post a Comment