'முஸ்லிம்களுக்கு பாதிப்பு - JVP யுடன் இணைந்து செயலில் இறங்குவது, முஸ்லிம் தலைமைகளின் கடமை'
-ARA.Fareel-
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகும். அதனால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதிப்புறாத வகையிலான தேர்தல் முறைமைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது;
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வட்டார முறைமையும் விகிதாசார முறைமையும் கலந்த புதிய முறைமையின் கீழ் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம் முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படும்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக இறுதியாக 3250 பேர் பதவி வகித்தார்கள். இவர்களில் 350 பேர் முஸ்லிம்களாவார்கள். தற்போது இப் பிரதிநிதித்துவம் 8000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த 8000 பேரில் 2000 பேர் பெண் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளார்கள். 25 வீதம் பெண் பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளது. இந்த 8000 பேரில் எத்தனை பேர் முஸ்லிமாக இருப்பார்கள் என்பது சந்தேகமாகும். ஏற்கனவே இருந்த 350 பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? என்பது சந்தேகமாகும்.
எனவே தேர்தல் முறைமை மாற்றத்தினால் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சமூகத்துக்காக இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது பொதுத் தேர்தலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
இது விடயத்தில் காலம் தாழ்த்தாது செயலில் இறங்குவது எமது அரசியல் தலைமைகளின் கடமையாகும் என்றார்.

Your always double game.your the big agent of mahinda rajapaksha.
ReplyDeleteMr. Sana Faleel I respect your oppenion
Delete