Header Ads



பருப்பு மூட்டைகள் விழுந்ததில் ஒருவர் பலி, 4 பேர் காயம்

பருப்பு களஞ்சியசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் சப்புகஸ்கந்தையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த களஞ்சியசாலையில் பருப்பு சேகரித்து வைக்கப்பட்டிருந்த, மூட்டைகள் சரிந்து விழுந்ததால் ஒருவர் மூட்டைகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் குறித்த விபத்தில் காயமுற்ற நான்கு பெரும் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.