Header Ads



'முஸ்லிம்களுக்கு பாதிப்பு - JVP யுடன் இணைந்து செயலில் இறங்குவது, முஸ்லிம் தலைமைகளின் கடமை'

-ARA.Fareel-

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை­மையின் கீழ் நடத்­தப்­பட்டால் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் கடு­மை­யாகப் பாதிப்­புக்­குள்­ளாகும். அதனால் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்து பேச்­சு­வார்த்­தைகள்  நடத்தி முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் பாதிப்­பு­றாத வகை­யி­லான தேர்தல் முறை­மைக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும் என மீள் குடி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா தெரி­வித்தார்.உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில் தெரி­வித்­த­தா­வது;

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் வட்­டார முறை­மையும் விகி­தா­சார முறை­மையும் கலந்த புதிய முறை­மையின் கீழ் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இம் முறை­மையின் கீழ் தேர்தல் நடத்­தப்­பட்டால் வடக்கு கிழக்கில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­களைத் தவிர நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் முஸ்லிம் பிர­திநி­தித்­து­வத்­துக்குப் பாதிப்பு ஏற்­படும். 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பிர­தி­நி­தி­க­ளாக இறு­தி­யாக 3250 பேர் பதவி வகித்­தார்கள். இவர்­களில் 350 பேர் முஸ்­லிம்­க­ளா­வார்கள். தற்­போது இப் பிர­தி­நி­தித்­துவம் 8000 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த 8000 பேரில் 2000 பேர் பெண் பிர­தி­நி­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளார்கள். 25 வீதம் பெண் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த 8000 பேரில் எத்­தனை பேர் முஸ்­லி­மாக இருப்­பார்கள் என்­பது சந்­தே­க­மாகும். ஏற்­க­னவே இருந்த 350 பிர­தி­நி­தித்­து­வத்­தையும் காப்­பாற்றிக் கொள்ள முடி­யுமா? என்­பது சந்­தே­க­மாகும்.

எனவே தேர்தல் முறைமை மாற்­றத்­தினால் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்­பு­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. சமூ­கத்­துக்­காக இது விட­யத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இது தொடர்­பாக ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்­தைகள் நடத்த வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது பொதுத் தேர்தலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

இது விடயத்தில் காலம் தாழ்த்தாது செயலில் இறங்குவது எமது அரசியல் தலைமைகளின் கடமையாகும் என்றார்.

2 comments:

  1. Your always double game.your the big agent of mahinda rajapaksha.

    ReplyDelete
    Replies
    1. Mr. Sana Faleel I respect your oppenion

      Delete

Powered by Blogger.