Header Ads



IS தீவிரவாதிகளுக்கு எதிராக, ஜனாதிபதி முன் ஒத்திகை - அமெரிக்கத் தூதுவரும் பங்கேற்பு


மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு இலட்சினையை அணிவித்தார்.

இதன்போது கடற்படையினருக்கான விசேட ஒத்திகை நிகழ்வினையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து முள்ளிக்குளம் கடற்படைத்தளத்தில் விசேட ஒத்திகை நிகழ்வு இடம் பெற்றது.

ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பானது கடற்கரை பகுதியில் சிலரை பிடித்து பணயக்கைதிகளாக வைத்து சித்திரவதை செய்கின்றது.

இந்நிலையில் கடற்படை, விமானப்படை என்பன இராணுவத்தின் உதவியுடன் குறித்த ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டு பிடித்து வைக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நிகழ்வாக காணப்பட்டது.

மேலும் ஐஸ்.ஐஸ் தீவிரவாத அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் சண்டையில் உயிரிழந்துள்ளமை மற்றும் குறித்த பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை போன்ற ஒத்திகை நிகழ்வு இடம் பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஆகியோர் குறித்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்டனர்.

இதன் போது கடற்படை தளபதி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆயினும் நடாத்தப்பட வேன்டிய ஒத்திகை என்ன தெரியுமா ?

    மக்களின் காணிகளை அபகரித்திருக்கும் படையினரிடமிருந்து அவற்றை மீட்டெடுத்து மக்களுக்கு அவற்றை மீழ வளங்கும் நிகழ்வு ஒத்திகையே நடைபெற வேன்டும்.

    எங்குமே தலைகீழ் நிகழ்வுதான் நடக்கிறது..............

    ReplyDelete

Powered by Blogger.