Header Ads



களுத்துறை துப்பாக்கிச்சூடு - வெலிக்கடைச் சில சிறைக் கைதிகள் மகிழ்ச்சி கொண்டாட்டம்


களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சில கைதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

களுத்துறையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான சமயங் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக சமயங் உள்ளிட்ட சந்தேக நபர்களை அழைத்துச் சென்ற போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் கேள்விபட்ட வெலிக்கடைச் சிறைச்சாலையின் சில கைதிகள் மகிழ்ச்சியை வெளியிட்டு அதனை கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அறிந்து கொண்ட களுத்துறைச் சிறைச்சாலை கைதிகள் பெரும் துயரடைந்துள்ளதாகவும் பகல் உணவையும் தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.