Header Ads



புலனாய்வுத் துறையினரை மதிக்க வேண்டும், நாம் மறந்து விடக்கூடாது - கோத்தபாய

தெற்கில் வாழும் நாம் புலனாய்வுப் பிரிவிற்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் திறமை காரணமாகவே கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் ஊடுருவி இருந்த புலிகளை அழிக்க முடிந்தது. என கோத்தபாய ராஜபக்ச  தெரிவித்தார்.

கொழும்பு விகாரை ஒன்றில் இடம் பெற்ற விஷேட வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

30 வருட யுத்தத்தை வென்று எடுக்க நாட்டின் புலனாய்வுத் துறை பாரிய சேவையினை செய்தனர். அமைதியான அவர்களுடைய சேவை காரணமாகவே இலங்கையின் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் புலிகளை வெல்ல முடிந்தது.

தெற்கில் வாழும் நாம் புலனாய்வுப் பிரிவிற்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் திறமை காரணமாகவே கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் ஊடுருவி இருந்த புலிகளை அழிக்க முடிந்தது.

அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் வெற்றி என்பது சாத்தியம் இல்லை. அந்த நன்றியை நாம் மறந்து விடக்கூடாது. செய்நன்றி அறிந்த மக்கள் எவருமே அதனை மறக்கமாட்டார்கள்.

அவ்வாறான சிறப்பு மிக்க புலனாய்வுத் துறையினரை மதிக்க வேண்டும், எதனையும் மறந்துவிடலாகாது எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.