Header Ads



கருணாவின் கழுத்தை நெறித்து, கொலைசெய்ய முயற்சித்தவர் கைது

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள கோவில் ஒன்றுக்கு கருணா சென்ற வேளை, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்த ஒருவர் நேற்று -23- கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சந்திவேல் பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கருணா மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுககு சென்றுள்ள போது, பலவந்தமான அவரது உடம்பில் மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெறிக்க முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த காலங்களில் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.