Header Ads



தம்புள்ளை முஸ்லிம், வர்த்தகர் மீது தாக்குதல் - முஸ்லிம் வர்த்­த­கர்கள் மீண்டும் பீதி

-ARA.Fareel-

தம்­புள்ளை நகரில் நேற்று முன்­தினம் மாலை முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான கடைக்குள் பல­வந்­த­மாக பிர­வே­சித்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வர் கப்பம் கோரி கலாட்டா செய்து கடை ஊழி­யர்­களைத் தாக்­கி­ய­தை­ய­டுத்து தம்­புள்­ளை­யி­லுள்ள முஸ்லிம் வர்த்­த­கர்கள் மீண்டும் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இதனையடுத்து மத்­திய மாகாண பிரதி பொலிஸ்மா அதி­ப­ரிடம் தங்­க­ளுக்கும் தமது வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறு முஸ்லிம்கள் கோரி­யுள்­ளனர்.

தம்­புள்ளை சந்­தையில் அமைந்­துள்ள கிழங்கு, வெங்­காயம் மற்றும் கரு­வாடு போன்ற பொருட்­களை விற்­பனை செய்யும் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான கடை­யிலேயே இச்­சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது.

இச் சம்­பவம் தொடர்பில் கடை உரி­மை­யாளர் ஜே.எம்.பஸீல் விளக்­க­ம­ளிக்­கையில்,

கடந்த புதன்­கி­ழமை மாலை பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வர் கடைக்குள் திடீ­ரென பலாத்­கா­ர­மாகப் பிர­வே­சித்து கப்பம் கோரி­னார்கள்.

நாங்கள் கப்பம் கொடுப்­ப­தற்கு மறுப்புத் தெரி­விக்­கவே கடை ஊழி­யர்­களைத் தாக்­கி­விட்டு தப்பிச் சென்­றார்கள். உடனே தம்­புள்ளை பொலிஸ் நிலை­யத்தில் முறை­பாடு செய்தேன். மத்­திய மாகாண பிரதி பொலிஸ் மா அதி­ப­ருக்கும் சம்­பவம் அறி­விக்­கப்­பட்­டது. சந்­தேக நபர்­களை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு அவர் தம்­புள்ளை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு உத்­த­ர­விட்டார் என்றார்.

தம்­புள்ளை பொலிஸார் சந்­தேக நபர்கள் நால்­வ­ரையும் கைது செய்து நேற்று தம்­புள்ளை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­தனர். நீதிவான் சந்­தேக நபர்கள் நால்­வ­ரையும் எதிர்­வரும் மார்ச் மாதம் 8 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

தம்­புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி சி.ஐ. விக்­கி­ர­ம­ரத்­னவைத் தொடர்பு கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­ய­போது;

 ' கப்பம் கோரி­யமை, கடை­யி­லுள்­ள­வர்­களை அச்­சு­றுத்­தி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாவண்ணம் பாதுகாப்புக் கடமைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. இது கப்பம். இனவாதமென தலைப்பிட்டு பீதியை ஏற்படுத்த வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.