தம்புள்ளை முஸ்லிம், வர்த்தகர் மீது தாக்குதல் - முஸ்லிம் வர்த்தகர்கள் மீண்டும் பீதி
-ARA.Fareel-
தம்புள்ளை நகரில் நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடைக்குள் பலவந்தமாக பிரவேசித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வர் கப்பம் கோரி கலாட்டா செய்து கடை ஊழியர்களைத் தாக்கியதையடுத்து தம்புள்ளையிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் மீண்டும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தங்களுக்கும் தமது வர்த்தக நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு முஸ்லிம்கள் கோரியுள்ளனர்.
தம்புள்ளை சந்தையில் அமைந்துள்ள கிழங்கு, வெங்காயம் மற்றும் கருவாடு போன்ற பொருட்களை விற்பனை செய்யும் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஜே.எம்.பஸீல் விளக்கமளிக்கையில்,
கடந்த புதன்கிழமை மாலை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வர் கடைக்குள் திடீரென பலாத்காரமாகப் பிரவேசித்து கப்பம் கோரினார்கள்.
நாங்கள் கப்பம் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கவே கடை ஊழியர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்கள். உடனே தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தேன். மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் சம்பவம் அறிவிக்கப்பட்டது. சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு அவர் தம்புள்ளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார் என்றார்.
தம்புள்ளை பொலிஸார் சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்து நேற்று தம்புள்ளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர். நீதிவான் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தம்புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ. விக்கிரமரத்னவைத் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவியபோது;
' கப்பம் கோரியமை, கடையிலுள்ளவர்களை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாவண்ணம் பாதுகாப்புக் கடமைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது கப்பம். இனவாதமென தலைப்பிட்டு பீதியை ஏற்படுத்த வேண்டாம்
ReplyDelete