Header Ads



பள்ளிவாசலுக்கு 20 பேர்ச் காணி வழங்க, சிங்களவர் எதிர்ப்பு - ஆர்ப்பாட்டமும் செய்தனர்


தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக பாரிய நகரம் மற்றும் மேற்கு பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க 20 ேபர்ச் காணி வழங்­கு­வ­தற்கு உறுதி வழங்­கி­யுள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை தம்­புள்ளை நகரில் கையொப்பம் சேக­ரிக்கும் வேலைத்­திட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது.

தம்­புள்­ளையில் தொழுகை மண்­டபம் நிர்­மா­ணிப்­ப­தற்கு எதி­ராக ஒரு இலட்சம் கையொப்பம் சேக­ரிக்கும் வேலைத்­திட்டம் என நகரில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.

தம்­புள்ள பொரு­ளா­தார மையம், கெக்­கி­ராவ பஸ்­நி­லையம், பொதுச்­சந்தை, கடி­கா­ரச்­சந்தி ஆகிய பகு­தி­களில் கையொப்­பங்கள் சேக­ரிக்­கப்­பட்­டன.

No comments

Powered by Blogger.