Header Ads



முஸ்லிம் பிரதேசங்களுக்குள் பொதுபல சேனா உட்புக தடை - பதில் நீதிபதி ஹபீப் றிபான் அதிரடி

ஓட்டமாவடி, வாழைச்சேனை எல்லைக்குல் பொதுபலசேனா வருகைக்கு தடை- வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதவான் நடவடிக்கை. 

நேற்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தானந்த ஞானசார தேரோ  தலைமையில் மட்டக்களப்பு நகரத்தில் இடம்பெற இருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு நீதிமன்றத்தால் மட்டக்களப்பிற்குள் நுழைவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கிராமமான ரெதிதென்ன, ஜெயந்தியாய போன்றவற்றின் ஊடாக பொதுபலசேனாவினர் ஓட்டமாவடியை அடைய முயற்சித்தவேளை வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதவான் ஹபீப் றிபான் அவர்களால் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கைகைக்கு இணங்க, வாழைச்சேனை நீதிமன்ற எல்லைக்குல்லும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து புனானையில் பொலிசார் பொதுபலசேனாவினரை தடுத்து நிறுத்தினர். பின்னர் புனானையில் சிறுது நேரம் தரித்து நிண்ட சேனா குழுவினர் முயற்சி கைகூடாது மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.

-அப்துல்லாஹ்-

3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்...
    இஸ்லாமியக் கோட்டையை அல்லாஹ்வின் உதவியுடன் கல்விமூலம்
    பலப்படுத்துவோம்...

    ReplyDelete
  2. இலங்கையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இனவாதத்துடன் செயல்படும் பௌத்த அமைப்பினரை வளரவிட்டு அரசியல் நடாத்திய இலங்கைக்கு மேலும், மேலும் அவமதிப்பை ஏறபடுத்தம் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

    இன்று மட்டக்களப்பில் பொதுபல சேனாவால் பதற்றம்.

    ஏன் அன்று அப்துர் றாசிக்கை கைது செய்த அரசுக்கு பௌத்த இனவாத தலைவர்களை கைது செய்ய முடியாது?..... புலிகள் செயல்பாடு இருக்கும் காலத்தில் இவர்கள் எங்கே?... இப்படி பல எழுதமுடியாத பல வார்த்தைகள் பேசப்படுகின்றது.

    ReplyDelete
  3. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்றாலும் அவர்கள் இதை வைத்தே சஇங்கஅள இலஅங்கஐயஐ முஸ்லிம்கள் தம்வசப்படுத்திகலகொண்டிருக்கிறார்கள் ..அங்கு சிங்களவர்களுக்கு போகவே அனுமதியில்லை என்று திசை திருப்புவார்கள். பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.