Header Ads



IS பயங்கரவாதம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் - ஷியா பிரிவு ஹிஸ்புல்லா

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா இந்தக் கருத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

இஸ்லாமிய தேச இயக்கம் உருவாகக் காரணம் அமெரிக்கா என்று அந்த நாட்டு அதிபர் தேர்தல் வேட்பாளரே கூறியிருக்கிறார். அவர் தக்க ஆவண ஆதாரங்களோடுதான் அதைத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக, புதிய இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவை அமெரிக்கா உருவாக்கியது என்று ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை நிறுவியவர் ஒபாமா என்றும், ஹிலாரி கிளிண்டன் அதன் துணை நிறுவனர் என்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

இராக், லிபியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பாக அமெரிக்கா பின்பற்றிய தவறான வெளியுறவுக் கொள்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோன்றியது என்று டிரம்ப் கூறினார். எனினும், அதை பரிகாசமாகக் கூறினேன் என்று பின்னர் விளக்கமளித்தபோதிலும், அவரது கருத்து பரவலான கண்டனத்தைப் பெற்றது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்து சரிதான் என்று ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஷியா பிரிவு தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லா லெபனானைச் சேர்ந்தது. இந்த இயக்கத்துக்குத் தனியாக அரசியல் பிரிவு உண்டு. லெபனான் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதன் ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு ஆதரவாக சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. உண்மையில் USA யின் உதவி இல்லாவிடில்
    அனேக முஸ்ஸிம் நாடுகள் தற்போது ISIS முஸ்ஸிம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல காமடி! IS இடம் ஆயுதங்கள் எங்கு தயாரிக்கப்பட்டவை? கடல் கடந்து அவ்வாயுதங்கள் அமெரிக்காவிலிருந்து IS இன் கைக்கு எவ்வாறு வந்து சேர்நதன? அமெரிக்காவின் கடற்படை அவ்வளவு நளிவடைந்த ஒன்றா? Shipments களை intercept பன்ன முடியாதா?
      உலக பொலிஸாரின் ஆயுத உற்பத்தியை விற்கவும் சந்தஐப்படுத்தவும் இடமும் , பல குழுக்களும் வேண்டும்.
      போர்/சண்டை இல்லாவிடில் ஆயுதம் விற்கவும் முடியாது , அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கவும் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படியானால் பணம் எப்படி சம்பாதிப்பது?

      Delete

Powered by Blogger.