Header Ads



உலக இஸ்லாமிய, பொருளாதார மாநாடு ஆரம்பமாகியது

பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று முன்னர் இந்தோனேசிய  தலைநகர் ஜெகர்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது. 

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரட்பண நிகழ்வில் பிதமர் ரணில் விக்கிரமசிங்க பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றம் அமைச்சர் கபீர் ஹசீம், இராஜங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சுஜீவ சேரசிங்க  ஆகியோர் பங்கேற்றுள்ளனர்

அத்துடன் மலேசிய பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸாக்இ தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹுமொன், கென்ய ஜனாதிபதி அல்பா கொண்கொண்டி, ஜோர்டானின் பிரதி பிரதமர், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவின் பிரதிநிதியாக மெயிட் நகோனா மஸ்கபானி, கட்டார் நாட்டு ஜனாதிபதி ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியின் பிரதிநிதியாக ஷேக் அஹமட் பின் ஜாசீம் அல் தானி,  நைஜீரியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர்அபுபக்கர், அல்ஜீரியாவின் கைத்தொழில் அமைச்சர் அப்டீசெலீம் புஜ்சோரிப், வியட்நாம் ஜனாதிபதி சார்பாக விசேட பிரதிநிதி டு தங் ஹாய், தாய்லாந்து பிரதமர் சார்பில் விசேட பிரதிநிதி விநிச்சய் சீம்சியங்  இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் சார்பில் அஹமட் மொஹமட்  அலி உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

உலக இஸ்லாமிய பொருளாதார  மன்றத்தின் தலைவர் துங்முஸா ஹைடம் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இந்தோனேசிய நிதி அமைச்சர் முல்யானி இன்டிராவாட்டி சிறப்புரை வழங்கினார்.  இந்தேனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு உரையாற்றியதோடு 12ஆவது உலக இஸ்லாமிய பொருளதார மாநாட்டை உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைத்தார். 

மலேசிய  பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸாக் விசேட உரையை ஆற்றினார்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏனைய தலைவர்கள் உரையாற்றினர். 

No comments

Powered by Blogger.