Header Ads



பாத யாத்திரையில் மைத்திரிக்கு அபகீர்த்தி, ஏற்படுத்திய சிறுவன் தொடர்பில் விசாரணை

பாத யாத்திரையை ஏற்பாடு செய்தவர்கள் சிறுவன் ஒருவர் மூலம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தின் முன்னால், ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பேசியமை, மேலும் சிலர் அப் பகுதியில் சத்தம் எழுப்பியமை தொடர்பில் இரகசிய பொலிஸார் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். 

பெற்றோலிய வள அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அத்துடன், எந்தவொரு சுதந்திரக் கட்சி உறுப்பினரும் தமது தாய் வீட்டுக்கு அவ்வாறு அபகீர்த்தியை ஏற்படுத்துவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணிகளில் தாக்குதல் மேற்கொண்டமை அக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என குறிப்பிட்ட அவர், சில திரீவீல் கட்சிகள் மூலம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னாள் ஹூ என சத்தமிடப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேபோல், மஹிந்த ராஜபக்ஷவை முன்னிருத்தி இந்த திரீவீல் கட்சி தலைவர்கள் சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதாகவும், அவர் கூறியுள்ளார். 

அத்துடன், தற்போதைய யாப்பின் பிரகாரம் மஹிந்தவுக்கு அதிகாரத்துக்கு வர முடியாது என தௌிவாக உள்ள போதும், அவரால் மக்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுவதாகவும், அமைச்சர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.