Header Ads



மாடு அறுப்­புக்கு எதி­ராக, மீண்டும் போராட்­டம் - சிங்ஹலே அறிவிப்பு

-விடிவெள்ளி  ARA.Fareel-

இலங்­கையில் மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான போராட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக சிங்ஹ லே அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்து இலட்­சக்­க­ணக்­கா­னோரின் கையொப்­பத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்­றினைச் சமர்ப்­பித்தும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொள்­ள­வில்லை என அவ்­வ­மைப்பு குற்றம்சாட்­டி­யுள்­ளது.

மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்­கை­களை மீண்டும் ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை விரைவில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிங்ஹ லே அமைப்பின் செய­லாளருமான மெதில்லே பஞ்­சா­லோக தேரர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

மாடு அறுப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பேராட்­டத்தில் பௌத்த குரு­வொ­ருவர் தீ வைத்­துக்­கொண்டு உயி­ரி­ழந்தார். போவத்தே இந்­திர ரத்ன தேரர் கண்­டியில் இவ்­வாறு உயிர்த் தியாகம் செய்து கொண்ட பின்பு கூட அர­சாங்கம் மாடு அறுப்­பதை நிறுத்­து­வ­தற்கு எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. அதனால் விரைவில் மீண்டும் எமது போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம். 

மாட்­டி­றைச்சி உண்­பதைத் தடுக்க நாம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு உண்­பது அவர்­களின் உரி­மை­யாகும். அதனால் மாட்­டி­றைச்சி உண்ணும் முஸ்­லிம்கள் மற்றும் ஏனைய மக்­களின் மாட்­டி­றைச்சி தேவையை நிறை­வேற்­ற­வ­தற்­காக அர­சாங்கம் வெளி நாட்­டி­லி­ருந்து இறைச்­சியை இறக்­கு­மதி செய்ய வேண்டும் எனக் கோர­வுள்ளோம். 

எமது இந்த எதிர்ப்பு போராட்­டத்தில் இந்து மற்றும் ஏனைய மக்­களின் ஆத­ர­வையும் பெற்று அவர்­க­ளையும் இணைத்­துக்­கொள்­ள­வுள்ளோம். இந்து மதத்­த­வர்கள் மாடு­களை தமது தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள்.

பௌத்­தர்கள் நாம் எமக்கு பால் புகட்டும் தாயின் அடுத்த ஸ்தானத்தில் பசு­மா­டு­களைக் கரு­து­கின்றோம். அதனால் மாடுகள் அறுக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற கொள்­கை­யு­டை­ய­வர்­க­ளாக இருக்கிறோம். இலங்கையில் தினம் 5 ஆயிரம் மாடுகள் அறுக்கப்படுகின்றன. பௌத்த நாடான இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யும்படி ஜனாதிபதியைக் கோரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Fist of all BBS & Singele must been sluaghtes, then only there will be peace in the country.

    ReplyDelete
  2. சரி ஹஜ்ஜின் ஒரு கடமையான குர்பான் முன் வரவுள்ளது இவர்கள் இப்போதே அதற்கான அடித்தாளம் இடுகின்றனர் என்னவோ இலங்கையில் முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டிறைச்சி பிரியர்கள் மற்றும் உண்பவர்கள் போல் இவர்களின் கூற்று உள்ளது. இவர்களின் அடிப்படை நோக்கம் என்ன வென்பதே தெரியாது. மண்டையில் முடி இல்லாத இவர்களை என்ன சொல்வது என்றே தெரியாது.
    எனக்கு ஓன்று மட்டும் விளங்காது அது எதுவென்றால் இலங்கையில் மாடு அறுத்தால் அம்மாடுகள் தாயின் அந்தஸ்தில் உள்ளவை அனால் வெளிநாட்டில் அறுத்தால் அம்மாடுகள் எந்த அந்தஸ்தில் இவர்கள் பார்கின்றனர். ஏன் இவர்களுக்கு புரியாது எந்த நாட்டில் இருந்தாலும் அது மாடு மாடுதான் ஒரு நாளும் அது ஆடாக மாறது.
    இவர்கள் மாட்டின் பால் குடிப்பதால் அது தாயின் இஸ்தானதுக்கு பார்கின்றனர் அப்படியாயின் உண்மையில் வெளிநாட்டில் அறுக்கப்படும் மாடுகளைதான் உண்னப்படாது காரணம் அவுஸ்த்ரேலிய போன்ற நாடுகளில் பால் கரந்து முதுமையான மாடுகளைதான் கூடுதலாக அறுத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள். அதேநேரம் இந்த மாடுகளை வைத்து கறந்த பால் தான் பால்மாவகா அது அறுக்க முன்னர் நாங்கள் அறுந்தி முடிக்கின்றோம்.
    இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் குர்பான் காலங்களில் இந்த நாட்டு சட்டதிட்டங்களை மதித்து அதற்கு ஏற்றவாறு எமது கடமைகளை முறைப்படி செய்தால் யாருக்கும் எந்த கேள்வியும் இல்லாமல் இருக்க வழி சமைக்கும் அதேநேரம் இந்த குர்பான் அறுப்பு விடயங்களை முக்கியமாக மாட்டின் கையிற்றை பிடித்து ஒரு போட்டோ அறுக்கும் பொது ஒரு போட்டோ பின் உரிக்கும் பொது ஒரு போட்டோ பின் பார்சல் பண்ணி பங்கீடு பண்ணும் பொது ஒரு போட்டோ இப்படியாக A To Z வரை போட்டோ பிடித்து FACEBOOK பதிவு இடுவதை முற்றாக தவிர்க்குமாறும் மிக பணிவன்புடன் இதை படிக்கும் அனைவரிடமும் அதேநேரம் இதை படிக்காத இன்றைய இளம் சமுகதிருக்கும் எதிவைக்குமாரும் கேட்டு கொள்கின்றேன் .

    ReplyDelete
  3. I think, there must be a business plan behind all these, they want to export beef, therefore they are trying to stop slaughtering. Then they can buy it for low price.

    ReplyDelete
  4. Mr,ishak a.raheem wel said thanks for u r openion

    ReplyDelete
  5. வோதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுகிறது எனவே மரத்தை வெட்டி வோரை பிடுங்கி எரிய வேண்டும் .அல்லாஹ்விடம அணைவரும துவா செய்யும்போது நிச்சயம் அல்லாஹ் வெற்றி யைத் தருவான.அலஹம்துலில்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.