Header Ads



இன்னும் ஒரு மஹிந்த ராஜபக்ச அவசியம் இல்லை என்கிறார் UNP அமைச்சர்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கையாள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முழுமையான ஆளுமை இருக்கிறது.

எனவே கோட்டாபய ராஜபக்சவை இரண்டாம்நிலை தலைவராக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவசியம் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.

கிராமியத்துறை பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால, பலதேர்தல்களில் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன் அவர் 40 வருட அரசியல் அனுபவத்தையும் கொண்டுள்ளார். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்பு இன்னும் ஒரு ராஜபக்ச அவசியம் இல்லை என்று ஹரிசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், அர்ஜூன மஹேந்திரனுக்கு மத்தியவங்கி ஆளுநர் பதவி வழங்கப்படாவிட்டால் சர்வதேச மட்டத்தில் வேறு ஒரு பதவி கிடைக்கும்.

எனவே, ஆளுநர் பதவி இல்லையென்பதால் அவரைப்பொறுத்தவரை அது பாரிய பிரச்சினையில்லை என்றும் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.