Header Ads



"புதிய வாகனத்தில் செல்லும் அமைச்சர்களை தூக்கி, கடலில் போட வேண்டும்"

அமைச்சர்கள் புதிய வாகனத்தில் செல்லும் போது மக்கள் அவர்களை தூக்கிச் சென்று கடலிலோ அல்லது ஆற்றிலோ போட வேண்டும் என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவையாற்ற செல்லும் போது சொகுசு வாகனங்கள் இல்லாமல் செல்ல முடியாது, தூர இடங்களுக்கு செல்ல முடியாது என்று சில அமைச்சர்கள் கூறுகின்றனர், இவர்கள் சொல்வதையும் நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். ஏனெனில் நாம்தானே அவர்களை மக்கள் சேவையாற்ற வாக்களித்து அழைத்து வந்தோம் என கலாநிதி நிர்மால் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.

தற்போது அவர்கள் செல்வதை கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பொதுமக்களாகிய நாம் இருக்கிறோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் செய்வது தவறு என பொதுமக்கள் கருதும் பட்சத்தில் அதற்கு எதிர்ப்பினை வெளிகாட்ட வேண்டும்.

அமைச்சர்கள் வாகனங்களில் செல்லும் போது அவர்களுக்கு மாலை இட்டு, கைத்தட்டி வரவேற்பளிக்காமல் தமது எதிர்ப்பினை வெளிகாட்டுவதே சிறந்தது என்றும் கலாநிதி நிர்மால் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர்கள் ஆகாயத்திலிருந்து வந்தவர்கள் அல்ல நாம் செலுத்தும் வரியினாலே அவர்கள் வாகனங்கள் கொள்வனவு செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. The persons as like Dr.Normal must come to political field.

    ReplyDelete
  2. We elect them and give our money for their luxurious life.

    ReplyDelete

Powered by Blogger.