Header Ads



ஜாம்பவான் அலவி, SLFP கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பைப் பேணுவதில் முக்கிய பங்காற்றினார் - மைத்ரி


-அனுதாபச் செய்தி - 2016 ஜுன் மாதம் 16ஆம் திகதி மைத்ரிபால சிறிசேன-

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்க செயற்பாட்டின் மிகப்பெரும் ஜாம்பவானான அலவி மௌலானா அவர்களின் மறைவு இலங்கையின் தொழிற்சங்க செயற்பாட்டுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். இத்தகைய போராட்ட உணர்வுள்ள செயற்பாட்டாளர்கள் மிக மிக அரிதாகவே உருவாகின்றனர்.

தாம் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக தமது உயிரைப் பணயம் வைத்து முன்னணியில் நின்ற அலவி மௌலானா அவர்கள் தாம் ஒரு முன்மாதிரியான தொழிற்சங்க செயற்பாட்டாளர் என்பதை பல சந்தர்ப்பங்களில் அச்சமின்றி முன்வந்து நிரூபித்திருக்கின்றார்.

தொழிற்சங்கப் போராட்டங்களில் தமது கடமைப்பொறுப்புக்களை முன்னின்று நிறைவேற்றிய அலவி மௌலானா அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பைப் பேணுவதில் ஒரு முக்கிய பங்கை வகித்தார்.

உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன அவரிடம் காணப்பட்ட மிக முக்கிய பண்புகளாகும். மேலும் சிங்கள மொழியைக் கையாள்வதிலும் அம்மொழி மூலமான தொடர்பாடலிலும் அவர் வியக்கவைக்கும் வகையில் திறமைபெற்றிருந்தார்.

போலித்தன்மையற்ற மிக எளிமையான பண்பைக் கொண்ட இந்த போராட்ட உணர்வுமிக்க தொழிங்சங்கத் தலைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிக்கலற்ற இருப்புக்காக வழங்கிய பங்களிப்பை ஒரு போதும் மறந்துவிடமுடியாது. கட்சியின் வரலாற்றில் அவர் வகித்த வகிபாகம் அவருக்கேயுரிய தனித்தன்மையான ஒன்றாகும்.

முன்னால் அமைச்சரும் முன்னால் மேல் மாகாண ஆளுநரும் எமது நெருங்கிய அரசியல் சகாவுமான காலம்சென்ற அலவி மௌலானா அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.