Header Ads



மைத்திரி சென்றார், மகிந்த வரவில்லை, தப்பினார் ரவி, பாராளுமன்றத்தில் கூச்சல், முடிவை மாற்றிய JVP

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று 2.30 மணியளவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை  தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில் 6 மணியளவில் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 6.30  மணியளவில் பிரேரணைத் தொடர்பான முடிவுகள் வெளியடப்பட்டன.

இந்த முடிவின்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதோடு 28 பேர் சமூகமளிக்கவில்லை.

இந்நிலையில் நிதியமைச்சருக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சபையில் கூச்சிலிட்டதால் சபை நடவடிக்கைகளை பத்து நிமிடத்துக்கு சபா நாயகர் ஒத்திவைத்தார்.  

குறித்த பிரேரணைக்கு அதரவாக  மக்கள் விடுதலை  முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உட்பட ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த பிரேரணைத் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுகப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ரவி கருநாணாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணை நடைபெற்ற போது மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்றம் சென்றிருந்தார். எனினும் மகிந்த ராஐபக்ச வரவில்லை. முன்னதாக  பிரேரணை ஆதரவாக வாக்களிக்கப்போவதாக சொன்ன மக்கள் விடுதலை முன்னணி பின்னர் முடிவை மாற்றி ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்க்கது.

No comments

Powered by Blogger.