Header Ads



"காது கிடைக்கவில்லை"

திவுலபிட்டி பஸ் டிப்போவில்  ஊழியர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக  அதில் ஒருவர் மற்றையவரின் காதை கடித்து துண்டாக்கிய சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது.

பஸ் டிப்போவின்  வேலை பரிசோதகர் ஒருவரே தனது காதில் ஒன்றை இழந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். 

கொழும்பு – குருநாகல போக்குவரத்துப் பாதையில் பணியாற்றும் திவுலபிட்டி பஸ் டிப்போவைச் சேர்ந்த  சாரதிக்கும் அங்கு பணியாற்றும்  வேலை பரிசோதகர் ஒருவருக்குமிடையில் நேற்று  இரவு 11.30 மணியளவில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து பரிசோதகரின்  இடது காது  துண்டாகும் வகையில் சாரதி காதை கடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பரிசோதகர் உடனடியாக திவுலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகவும் சத்திரசிகிச்சைக்காகவும்  கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை மேற்கொண்டு துண்டாக்கப்பட்ட காதை இணைப்பதற்கு வைத்தியர்கள் முயற்சி செய்த போதிலும் துண்டாக்கப்பட்ட காது கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.