Header Ads



எனக்கு வாகனம் வேண்டாம் - பாலித தெவரப்பெரும

தமக்கு வழங்கப்பட உள்ள வாகனம் தேவையில்லை என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

தமக்கு அமைச்சிற்காக ஒதுக்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைச்சிற்கு வாகனம் தேவையில்லை எனத் தெரிவித்து பிரதி அமைச்சர் கடிதமொன்றை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த ஒதுக்கீடு செய்யப்படும் பணத்தை கலைஞர்களின் நலன்புரிக்காக பயன்படுத்துமாறு கோரியுள்ளார்.

அரசியல்வாதிகள் தனிப்பட்ட சொகுசை எதிர்பார்க்காது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் அரசியல்வாதிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுகளுக்கு வாகனம் கொள்வனவு செய்ய அரசாங்கம் 1180 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிட உள்ளமை குறித்து கடுமையான விமர்சனங்கள் பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.