Header Ads



"அயோக்கிய ஊடகங்களே, கொலைகாரனை கொலைகாரனாக மட்டும் பாருங்கள்"

-Fahad Ahmed-

உமர் மார்ட்டின் என்கிற பெயர் உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் பாத்ரூம் கிறுக்கர்கள் வரை உச்சரித்துக்கொண்டு நிமிடத்திற்கு நிமிடம் செய்திகளை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

உமர் மார்ட்டின் என்கிறவன் அமெரிக்காவில் உள்ள ஹோமோ செக்ஸ் லெஸ்பியன் க்ளப்பிற்க்குள் புகுந்து ஐம்பது பேரை கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்து இருக்கிறான்.

ஒரு கொலைக்காரனை எப்படி அணுகு வேண்டுமோ அப்படி இந்த செய்தி அணுகப்படவில்லை. காரணம் உமர் மார்ட்டின் ஒரு முஸ்லிம்.

தனி நபர் தீவிரவாதம் என புதிய பெயர் சூட்டி உள்ளது விஷமத்தனமான ஊடகங்கள்.

நாளை ஒரு முஸ்லிம் கல் தடுக்கி விழுந்தால் கூட தனி நபர் தீவிரவாதி கல்லை தாக்கினான் என ஊடக விபச்சாரர்கள் செய்தி போட்டாலும் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ்யிலும் தாலிபானிலும் தொடர்புடையவன் என்றும் தொடர்பு இல்லாதவன் என்றும் மாற்றி மாற்றி செய்திகளை கொடுத்து மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறது ஊடகங்கள்.

உமர் மார்டின் மதவெறியனா? தீவிரவாதியா? மனநோயாளியா? சராசரி மனிதனா? என பக்கம் பக்கமாக விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கிறது.

உமர் மார்ட்டின் கொடூர கொலையாளி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் அமெரிக்காவில் சின்ன சின்ன பொடியன்கள் முதல் வயதானவர்கள் வரை துப்பாக்கி கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் சுட்டு கொன்று கொலை செய்வார்கள்.

எந்தளவிற்கு என்றால் வீட்டில் மனைவியுடன் பிரச்சினை என்றால் கூட வெறித்தனமாக பலரை சுட்டு கொல்வார்கள்.

மாணவர்கள் ஆசிரியரையும் சக மாணவர்களையும் சாதாரண கோபத்திற்கு எல்லாம் சுட்டு கொலை செய்வார்கள்.

இப்படியானவரலாற்று பெருமை அமெரிக்காவிற்கு நிறைய உண்டு.

ஆனால் அது எல்லாம் இந்தளவிற்கு ஊதிப்பெருத்தாக்கப்படுவதில்லை.

ஆனால் முஸ்லிம் சிறுவன் கடிகாரத்தை கொண்டு வந்தால் கூட வெடிகுண்டு என பிரச்சினை செய்வார்கள்.

மன ரீதியாக சக அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற அளவிற்கு பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதன் காரணமாகவே சில வெறிப்பிடித்தவர்களால் அமெரிக்க இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்தற்காகவே கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய ஆண்கள் காரணம் இன்றி தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய ஃபோபியாவை உருவாக்கி இஸ்லாத்திற்கு எதிரான மாயை உருவாக்க காரணம் அமெரிக்காவின் பயம்...

ஏனேனில் அமெரிக்க மக்கள் இஸ்லாத்தின் பால் வேகமாக ஈற்க்கபடுகிறார்கள். எந்தளவிற்கு என்றால் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் அளவிற்கு இஸ்லாம் அங்கே வளர்கிறது. இன்னும் ஐம்பது அல்லது அதற்கும் குறைவான வருடத்தில் அது நடந்தே தீரும்.

அதனால் தான் அங்கே இஸ்லாமியர்கள் எது செய்தாலும் மொத்த மொத்த முஸ்லிம்கள் மீது அச்சுறுத்தல் உருவாகும் விதமாக உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி விட்டு ஒரு வித நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.

கொலைகாரனை ஆதரிக்கவில்லை, ஆனால் கொலைகாரனை கொலைகாரனாக மட்டும் பாருங்கள் என்கிறோம்.

அவன் ஒரு முஸ்லிம் மதத்துக்காக அவன் கொல்லவில்லை என  ஊடகங்கள் கூட அயோக்கியத்தனமாக செய்திகள் வெளியிட்டுள்ளது. எந்தளவிற்கு இது எதிர் மறையான சிந்தனையை உண்டாக்கும் எவனாவது கொலை செய்தால் முதலில் அவ்வாறு தான் செய்தி வாசிப்பார்களா?

இது புதுவகையான யுக்தி...

இதையும் கடப்போம்....

3 comments:

  1. போதிய ஆய்வோ, நிதானமோ, நடுநிலைச் சிந்தனையோ இல்லாமல், வெறுமனே உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம்கொடுத்து இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது. இது போன்ற கட்டுரைகள் முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் இருட்டில் வைத்திருக்க மட்டுமே உதவும்.

    கொலையாளியின் பெயர் உமர் மார்டீன் அல்ல, உமர் சித்தீகி மதீன் என்பதாகும். மார்டீன் வேறு, மதீன் வேறு.

    அமெரிக்காவில் மனைவியோடு பிரச்சினை என்றால், பொதுமக்களை சுட்டுக் கொல்லுவார்கள் என்று தவறான தகவலை தந்து, இந்தக் கொலைகளையும் அதே பட்டியலில் சேர்த்து சாதாரணப் படுத்த முயல்வது தவறான முன்மாதிரி ஆகும். அமெரிக்க வரலாற்றிலேயே தனிப்பட்ட துப்பாக்கிதாரியால் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். இதை மறைக்க முயல்வது பெரும் தப்பாகும்.

    அடுத்து கொலையாளியை முஸ்லிம் என்று சொல்லக்கூடாது, அது தனிப்பட்ட நபரின் தவறு என்று சொல்வதாக இருந்தால், யாராவது ஒரு முஸ்லிம் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்தாலே "மாவட்ட ரீதியில் முஸ்லிம் மாணவன் முதலிடம்" என்று பிரபல்யப் படுத்தும் நமது செயலை என்னவென்று சொல்வது? இரண்டுமே ஒரே விதமான அடையாளப் படுத்தல்களே ஆகும்.

    ஆகவே, கட்டுரையாசிரியர் இப்படியான தவறான தகவல்களை உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்கள் மத்தியில் திணிக்கக் கூடாது. அது, வளரும் முஸ்லிம் இளைஞர்களை வெறுப்பு சிந்தனையுள்ளவர்களாக, பகைமை மனநிலை கொண்டவர்களாக உருவாக்கிவிடும்.

    ReplyDelete
  2. இஸ்லாத்தைப் பற்றி மிக மோசமாக தகவல் வெளியிடுவதில் மேற்கத்தேய ஊடகங்கள் வெற்றி பெற்றுள்ளன.

    ReplyDelete
  3. ameer.umad.avarkalukku.nantry.avarathu.comment.parattukiren.intha.jafna.muslim.inayaththalam.enavathaththai.parappum.enaiyaththalamakivittathu.oruththan.thavaru.seithal.avanai.thiruththu.alavukku.katturai.eluthrhavendum.athaividuththu.avanukku.ukkamalikkikkum.alavukku.katturai.elutha.vendam.americavil.seththalum.manithan.srilankavil.seththalum.manithan.ethai.purinthu.kondumnatakkavendum.entha.enaiyathalaththil.muslimkalai.mattum.pirasurikkintrarkal.enayaththalaa.enpathu.natu.nilayakaerukkavendum.enthaenaiyaththalaththil.comment.pannum.perunpanmaienar.enaththuvasaththodu.comment.pannukurarkal

    ReplyDelete

Powered by Blogger.