பிரிட்டனின் பவுண்ட், வீழ்ச்சி அடைகிறது..!
இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்ற நிஜ சாத்தியக்கூறுகளை நிதி சந்தைகள் கருத்தில் கொண்டுள்ளதால், பிரிட்டனின் நாணயமான பவுண்ட், அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யென்னுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கொண்ட மக்களின் சதவீதம் கடந்த வாரத்தில் மட்டும் 80 லிருந்து 69 ஆக குறைந்திருப்பதாக பெட்ஃபேர் என்ற புக்மேக்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல முதலீட்டாளர்களும் அடுத்த நான்கு வாரங்களில் பவுண்ட் மதிப்பில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை மனதில் வைத்து இப்போதே தயாராகி வருவதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் பொருளாதார பிரிவின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment