Header Ads



சஜித் பிரேமதாச 4 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார் - எஸ்.பீ

கடந்த 10 வருடங்களுக்குள் சமுர்த்தி அமைச்சர்களாக இருந்தவர்கள் பாரிய நட்டத்தைஏற்படுத்தியுள்ளதாகவும், அதில் பசில் ராஜபக்ஸ வட்டி இல்லாமல் சமுர்த்தி கடனைக்கொடுத்து 7 பில்லியன் நட்டத்தையும், சஜித் பிரேமதாச 4 பில்லியன் நட்டத்தையும்ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று பதுளையில் சமுர்த்தி அதிகாரிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த கால முட்டாள் தனமான அரசியல் நடவடிக்கைகளால் சமுர்த்தி வியாபாரத்தை லாபமீட்ட முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஆட்சியின் போது வட்டி இல்லாமல் கடன் கொடுத்து பசில் ராஜபக்ஸ 7பில்லியனுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதால் நாம் கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டுக்கு செல்வோருக்கும் கடன் வழங்கி தங்களை மேலும் சிக்கல்களுக்குள் தள்ளி விட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதேச அரசியல்வாதிகள் சைக்கிள் வாங்கவும் முன்னாள் சமுர்த்தி அமைச்சர்கள் கடன் பெற்றுக் கொடுத்துள்ளதோடு, இந்த முட்டாள் தனமான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்தி விட்டு சமுர்த்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சமுர்த்தியின் சேமநலங்களை மக்கள் பெறுவது அவர்களது உரிமை அதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமுர்த்தி வங்கியை நவீனமயப்படுத்தி விரைவில் 200 வங்கிகளை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சமூர்த்தியில் கொள்ளை அடித்ததில் தரவரிசைப்படி 1.2.3 ஆகிய முதல் 3இடமும் இவரையே, சாரும்

    ReplyDelete

Powered by Blogger.