Header Ads



அரநாயக்காவில் தொடர்ந்து, மண்சரிவு அபாயம்


கேகாலை – அரநாயக்க பகுதியிலுள்ள 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 36 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன.

இதேவேளை, மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளின் கட்டடங்கள், சுற்று மதில்கள் மற்றும் வீதிகள் மண்சரிவினால் பாதிப்படையும் நிலையில் உள்ளன.

குறித்த இடங்களில்  தற்போது ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் அவதான முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.