Header Ads



மஹிந்த தலைமையிலான, புதிய கட்சியின் முதலாவது மாநாடு

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய கட்சியின் முதலாவது மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) கொழும்பில் நடத்தப்படவிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பஷில் ராஷபக்ஷ முன்னெடுத்து வருவதாகவும் ஆனால் பஷிலின் தலையிட்டை பொது எதிர்க் கட்சியினரின் பெரும்பாலானோர் விரும்பவில்லையென்றும்  தெரியவருகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரிசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை பொது எதிர்க் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய கிராம, நகர மட்டங்களில் மக்களை சந்தித்து புதிய கட்சிக்கான உத்தியோகத்தர்கள் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு புதிய கட்சிகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் இச் செயற்பாடுகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஆனால் பஷிலின் தலையீட்டை பொது எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் விரும்பாது  அவர்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அறியவருகிறது. 

இந்நிலையிலேயே   புதிய கட்சியின் முதலாவது தேசிய மாநாடு அடுத்த மாதம் கொழும்பில நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அறியவருகிறது. பொது எதிர்க்கட்சிக்கு ஆதரவை வழங்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது.

 

No comments

Powered by Blogger.