Header Ads



பள்­ளி­வாசல் பிரச்­சி­னையை, பொறு­மை­யாகக் கையாள்­வதே சிறந்­தது - ரணில்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் பிரச்­சி­னையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் அழைத்து  கலந்­து­ரை­யாடி தீர்த்து  வைக்­க­வுள்ளார்.

பள்­ளி­வாசல்  பிரச்­சி­னையை  பொறு­மை­யாகக்  கையாள்­வதே  சிறந்­தது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான  இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி  பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து  பாத்யா மாவத்தை  பள்­ளி­வாசல்  பிரச்­சினை இன நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம்  விளை­விப்­ப­தாக உள்­ள­தென்­பதை சுட்­டிக்­காட்டி இப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில்  தீர்வு பெற்­றுத்­த­ரு­மாறு வேண்­டிக்­கொண்டார்.

இந்தச் சந்­திப்பின் போதே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அழைத்து கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­ப­தாகக் கூறினார். விரைவில்  முஸ்லிம் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் அழைக்­க­வுள்­ள­தா­கவும் உறு­தி­ய­ளித்தார்.

தேசிய  ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர்  ஏ.எச்.எம்.பெளசி பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்பில் 'விடி­வெள்ளி'க்கு கருத்து வெளி­யி­டு­கையில், 

 பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்க பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்கு உறு­தி­யாக  இருக்­கிறார்.  முஸ்­லிம்­களின் சமயக் கட­மை­க­ளுக்கு எந்தத் தரப்­பி­ன­ராலும் இடை­யூ­றுகள்  ஏற்­ப­டா­தி­ருக்க உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

 இந்தப் பிரச்­சி­னையை  பொறு­மை­யாக கையாள வேண்டும். இரு­த­ரப்­பி­னரும் கலந்­து­ரை­யாட வேண்டும் என்றார்.

தெஹி­வளை பெரிய பள்­ளி­வாசலில் கடந்­த­வாரம் நடை­பெற்ற பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல்  விவ­காரம்  தொடர்­பாக   நடை­பெற்ற கூட்­டத்­திலும் எனது கருத்தும் இவ்­வாறே  அமைந்­தி­ருந்­தது. கூட்­டத்­திற்கு  முஸ்லிம் அமைச்­சர்கள்  சிலரும், எம்.பி.க்கள் சிலரும், பொலிஸ் உயர் அதி­கா­ரி­களும் சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர்.

நோன்பு காலம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளதால் நாம் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்திக் கொள்­ளாது இவ்­வி­வ­கா­ரத்தை  பொறு­மை­யாக  கையாள்வோம். அப்­பி­ர­தேச பெளத்த குருவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டுவோம்.  நாம் பிரச்­சி­னை­பட்டுக் கொண்டால்  தராவீஹ் தொழு­வ­தற்கு பெண்கள் பள்ளிக்கு செல்­லும்­போது சில­வேளை கற்­களை வீசி முறுகல் நிலை­யினை உரு­வாக்­கு­வார்கள் என்று  தெரி­வித்தேன் என்றார்.

1 comment:

  1. Basic problem is due to failure in maintaining the Law and Order in the country. Yahalanaya Jokers are committed to ensure this.

    ReplyDelete

Powered by Blogger.