பள்ளிவாசல் பிரச்சினையை, பொறுமையாகக் கையாள்வதே சிறந்தது - ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரச்சினையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடி தீர்த்து வைக்கவுள்ளார்.
பள்ளிவாசல் பிரச்சினையை பொறுமையாகக் கையாள்வதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரச்சினை இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளதென்பதை சுட்டிக்காட்டி இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருமாறு வேண்டிக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போதே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறினார். விரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி பாத்யா மாவத்தை பள்ளிவாசல் தொடர்பில் 'விடிவெள்ளி'க்கு கருத்து வெளியிடுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பள்ளிவாசல் விவகாரத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கு உறுதியாக இருக்கிறார். முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு எந்தத் தரப்பினராலும் இடையூறுகள் ஏற்படாதிருக்க உறுதியளித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை பொறுமையாக கையாள வேண்டும். இருதரப்பினரும் கலந்துரையாட வேண்டும் என்றார்.
தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் கடந்தவாரம் நடைபெற்ற பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திலும் எனது கருத்தும் இவ்வாறே அமைந்திருந்தது. கூட்டத்திற்கு முஸ்லிம் அமைச்சர்கள் சிலரும், எம்.பி.க்கள் சிலரும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.
நோன்பு காலம் ஆரம்பமாகியுள்ளதால் நாம் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது இவ்விவகாரத்தை பொறுமையாக கையாள்வோம். அப்பிரதேச பெளத்த குருவைச் சந்தித்து கலந்துரையாடுவோம். நாம் பிரச்சினைபட்டுக் கொண்டால் தராவீஹ் தொழுவதற்கு பெண்கள் பள்ளிக்கு செல்லும்போது சிலவேளை கற்களை வீசி முறுகல் நிலையினை உருவாக்குவார்கள் என்று தெரிவித்தேன் என்றார்.

Basic problem is due to failure in maintaining the Law and Order in the country. Yahalanaya Jokers are committed to ensure this.
ReplyDelete