நல்லிணக்கம் பற்றிய செய்திகளை, சிங்களவர்களுக்கு புகட்ட வேண்டியிருக்கிறது - மைத்திரி
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் போது வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவி பெற்றக் கொள்ளப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்பசார் உதவியும் எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது வேறும் உறுதிமொழிகளின் அடிப்படையிலோ பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகள் நாளைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பாக உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் போது பொதுநலவாய நாடுகள் மற்றும் வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென இலங்கை இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எமக்கு வெளிநாட்டு நீதவான்களின் சேவை தேவையில்லை எனவும், உள்நாட்டு ரீதியில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்க வேண்டுமெனவும் கடந்த அரசாங்கம் அதனை தவறவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் பற்றிய செய்திகளை வடக்கில் வாழ்வோரை விடவும் தெற்கு சிங்கள பௌத்தாகளுக்கு புகட்ட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை சில தரப்பினர் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment