Header Ads



அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக மேலும் 2 குற்றச்சாட்டுக்கள்

வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தில் இடம்பெற்ற கொலைகளுடன் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.2012ம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாரியளவில் கலவரம் ஏற்பட்டு பல கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் சிலருடன் இணைந்து அனுர சேனாநாயக்கவே கலகத்தின் போது கைதிகளை கொலை செய்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2012ம் ஆண்டு  பெப்ரவரி மாதம் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ததாகவும் அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.