பிரிட்டன் விலகல், ஐரோப்பாவுக்கும் சோகமான நாள், நிலைமையை கவனிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இது பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர் கூறியிருக்கிறார்.
ஆனால் பிரன்ஸிலும், நெதர்லாந்திலும் உள்ள தீவிர வலது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது நாடுகளிலிலும், இதே போல கருத்துக்கணிப்புகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்த முடிவு குறித்து தெரியப்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் நிலைமையை கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகைக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

Post a Comment