Header Ads



சர்­வ­தேச அல்­குர்ஆன் போட்­டி -இறுதிச் சுற்றில் இலங்­கை­யர்

(விடிவெள்ளி)

டுபாயில் நடை­பெறும் சர்­வ­தேச அல்­குர்ஆன் ஓதல் போட்­டியின் இறுதிச் சுற்­றுக்கு இலங்­கையைச் சேர்ந்த அஹ்மத் உமர் தகு­தி­பெற்­றுள்ளார்.

இவர் அட்­டு­லு­கம, பண்­டா­ர­க­மயைச் சேர்ந்­த­வ­ராவார். தனது பத்­தா­வது வயதில் குர்­ஆனை மனனம் செய்ய ஆரம்­பித்து அரை நாள் மட்­டுமே பயிற்­சிக்கு சென்று கொண்­டி­ருந்­தவர், ஆர்­வ­மி­கு­தியால் தமது பன்­னி­ரெண்டாம் வயது முதல் முழு­நே­ரமும் ­குர்­ஆ­னுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தமது பள்ளிப் படிப்­புடன் சேர்த்து குர்­ஆ­னையும் மனனம் செய்து முடித்­து­ள்ளார்.

தந்­தை­யில்­லாத அஹ்மத் உம­ருக்கு தனது படிப்பில் மிகவும் உறு­து­ணை­யாக இருந்து உற்­சாகம் தந்­தது தனது தாய் நூருல் ஷிஃபா என்­கிறார்.இந்­நி­லையில் இலங்­கையில் நடந்த குர்ஆன் போட்­டியில் வெற்றி பெற்ற இவர், துபாய் சர்­வ­தேசப் போட்­டியில் பங்­கு­பெறும் தகுதிச் சுற்­றுக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இவர் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணையில் இப்­போட்­டியில் பங்­கேற்­றுள்ளார்.

இப்­போட்­டியில் குரல், உச்­ச­ரிப்பு, நினை­வாற்றல் என்று எல்லாத் தகு­தியும் பெறு­ப­வரே வெற்­றி­யா­ள­ராக அறி­விக்­கப்­ப­டுவார். ரூபாய் ஐம்­பது இலட்­சத்தை முதல் பரி­சாகக் கொண்­டுள்ள இப்­போட்­டியில் முதல் ஐந்து இடத்­திற்குள் வர­வேண்­டு­மென்­பதே தமது குறிக்கோள் என்­கிறார் அஹ்மத் உமர்.

நல்ல உச்­ச­ரிப்­புடன், சரி­யான குரல்­வ­ளத்­துடன் தமது அமர்வை முழு­மைப்­ப­டுத்­தி­விட்ட அஹ்மத் உமர் நினை­வாற்றல் தேர்வில் ஒரு சில பிழை­களை விட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்டார்.

ஜாமிஆ இன்­ஆமில் ஹஸன் பள்­ளியில் பயன்­றவர் வெற்றி பெற்று தம் நாட்­டுக்கும் பள்­ளிக்கும் பெருமை சேர்க்க விரும்­பு­வ­தாகத் தெரி­வித்தார்.

தமது வருங்­காலத் திட்டம் குறித்து கேட்கும் போது, மார்க்க சட்ட திட்­டங்­களை சரி­யாகக் கற்க வேண்டும்; மனனம் செய்த குர்ஆன் வச­னங்­களின் விளக்­கத்­தையும் மனனம் செய்ய வேண்டும்; அரபி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்; மௌலவியாக வேண்டும் என்றார்.  இன்னும் சில தினங்­களில் இத­ன் இறுதிப் போட்டி நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­த­க்­க­து.

No comments

Powered by Blogger.