மஹியங்கனையில் பதற்றநிலை
மஹியங்கனையில் -23- ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக பதற்ற நிலை தோன்றியுள்ளது.
வாகனங்கள் மறிக்கப்பட்டு, வீதிகள் அடைக்கப்பட்டு இந்த சில பொது மக்களும், பௌத்த தேரர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதன் காரணமாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹியங்கனையில் பௌத்த கொடி எரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியமை, வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தமை ஆகிய குற்றங்களின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர் இருவரின் விடுதலையை வலியுறுத்தியே இந்த நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

A people friendly government should not be dragged into
ReplyDeletetroubleshooting in anybody's favour and at the same we
need to keep in mind that justice has to deliver its
verdict to the innocent and not in favour of the guilty.
So , be careful not to fall on the side of guilty !