ரஞ்சன் ராமநாயக்கா, துப்பாக்கிச்சுடுவதை நிறுத்திய பிரதமர்
மாதிவலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புக்கு அருகில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரைப்படம் ஒன்றின் காட்சிக்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று காலை தான் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசியதாகவும் அந்த பயிற்சிகளை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் சிறுவர்களும் இருப்பதால், இவ்வாறான காட்சிகளை அவர்கள் பார்க்கும் போது அச்சமடைவார்கள் எனவும் உதயசாந்த குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment